சமையல் எரிவாயு சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் தெரியுமா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் தெரியுமா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக அறிவித்த மத்திய அரசு அதைப் பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கிழ் இணைப்பு பெற்றவர்க்ளுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற சுமார் 1.20 கோடி பேருக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ள நிலையில், மற்றவர்களுக்கு மானியம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓர் ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடையது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த மானியத் தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இந்த மானிய தொகையை நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.