பதவியை இழக்கிறாரா பீகார் சபாநாயகர்....???

மகாகத்பந்தனின் 50 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானம் பீகார் சட்டமன்றத்தின் செயலாளரிடம் தரப்பட்டுள்ளது.
பதவியை இழக்கிறாரா பீகார் சபாநாயகர்....???
Published on
Updated on
1 min read

மகாகத்பந்தன் கூட்டணியின் தலைவரான லலித் யாதவ் பீகார் சட்டசபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் சபாநாயகர்  விஜய் குமார் சின்கா அவருடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை உருவாகியுள்ளது.  நம்பிக்கையில்லா தீர்மானம் சவாலை ஏற்று கொண்டால் சபாநாயகர் அவர் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

தற்போது பாஜகவிற்கு ஆதரவாக 77 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.  பெரும்பான்மையை நிரூபிக்க இந்த வாக்குகள் போதுமானதாக இல்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் குமார் சின்கா தோல்வியடைந்தால் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த எம்.எல்.ஏவான ஆவாத் பிகாரி சவுத்ரி சபாநாயகராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பேச்சுவார்த்தையின் படி அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளான நிதி அமைச்சகம், சுற்றுசூழல் மற்றும் காடுகள் அமைச்சகம், நிலம் மற்றும் வரித்துறை, நலத்துறை, சாலை கட்டுமான துறை, பஞ்சாயத்து ராஜ் ஆகியவை ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

உள்துறை அமைச்சகம் முதலமைச்சரிடமே இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com