மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை குறைக்கிறதா கொரோனா..? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மக்களின்  ஆயுள்காலத்தை கொரோனா குறைப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை குறைக்கிறதா கொரோனா..? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மக்களின்  ஆயுள்காலத்தை கொரோனா குறைப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், உயிரிழப்பு விகிதத்தில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை அறிய மும்பையை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்கென 145 நாடுகளை சேர்ந்த கொரோனா பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அதன் முடிவில் கொரோனாவுக்கு  35 முதல் 69 வயதிலான ஆண்களே அதிகளவில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கொரோனாவால் மக்களின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் குறைந்து உள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் முறையே 69 மற்றும் 72 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஒரு ஆணின் ஆயுட்காலம்  67 அரை ஆண்டும், பெண்ணின் அதிகபட்ச ஆயுட்காலம் 69 புள்ளி 8 காலம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.