நன்கொடையாக வழங்கப்படும் 100 கோடி கொரோனா தடுப்பூசி: தருவது யார்?

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

நன்கொடையாக  வழங்கப்படும் 100 கோடி கொரோனா தடுப்பூசி: தருவது யார்?

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், கொரோனா வைரசை எதிர்த்து போராட ஒரே ஆயுதமான தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்க ஜி-7 கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஜி-7 கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.  இந்த முடிவிற்கு ஐ.நா., உலக சுகாதார அமைப்பு உள்பட பல்வேறு தரப்பும் பாராட்டு தெரிவித்துள்ளன.