கொரோனாவிலிருந்து மீண்ட பொருளாதாரம்.......

கொரோனாவிலிருந்து மீண்ட பொருளாதாரம்.......

உலகின் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையால் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் இந்திய பட்ஜெட் 2023 சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

வளர்ந்த பொருளாதாரம்:

தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக அதிகரித்துள்ள அதே நேரத்தில், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வளர்ந்துள்ளது என்று மத்திய பட்ஜெட் உரையில் சீதாராமன் கூறினார்.

வேகமாக வளரும் பொருளாதாரம்:

இந்தப் பின்னணியில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6-6.8% வரம்பிற்கு இடையில் வளரும் என்று பொருளாதார ஆய்வு இன்னும் எதிர்பார்க்கிறது எனவும் இது உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்ட இந்தியா:

கோவிட்-19 தொற்றுநோயின் அதிர்ச்சியில் இருந்து இந்தியா மீண்டுவிட்ட நிலையில்  ஜிடிபி வளர்ச்சி வாய்ப்புகளுக்கு நன்றாகவே உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”75வது ஆண்டில் நூற்றாண்டை நோக்கி.......” ப்ட்ஜெட் 2023!!