டெல்லி வந்த எகிப்து அதிபர்...எல்லைப் பகுதிகளில் "ஆபரேஷன் அலெர்ட்"...!

டெல்லி வந்த எகிப்து அதிபர்...எல்லைப் பகுதிகளில் "ஆபரேஷன் அலெர்ட்"...!
Published on
Updated on
1 min read

இந்தியாவின் 74-வது  குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி டெல்லி வந்தடைந்தார்.

வரலாற்றில் முதல் முறை :

ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்டிரல் விஸ்டா அவென்யூவில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக வட ஆப்பிரிக்க நாடான எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா எல்சிசி கலந்து கொள்கிறார். அதற்காக எல்சிசி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் ரஞ்சன் ராஜ்குமார் சிங் சிறப்பான வரவேற்பு அளித்தார். மூன்று நாள் பயணமாக வந்துள்ள எல் சிசி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு  குடியரசு  தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம் பங்கேற்பது குறிப்பிடத்தக்கத

இதனிடையே, குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, டெல்லி முழுவதும் டிரோன்கள், பாராகிளைடர், ஆளில்லா குட்டி விமானங்கள் , ஏர் பலூன்கள் , பாரா மோட்டார்கள் உள்ளிட்டவை பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இது தவிர, தீவிர கண்காணிப்புப் பணிகளும் ரோந்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதேபோல், எல்லைப் பகுதிகளிலும் ஆபரேஷன் அலெர்ட் என்ற பெயரில் துணை ராணுவத்தினர்  தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com