விசாரணைக்கு வரும் தேர்தல் பத்திர வழக்கு!!! நன்கொடைகளை அனுமதிக்குமா உச்சநீதிமன்றம்?!!

விசாரணைக்கு வரும் தேர்தல் பத்திர வழக்கு!!!  நன்கொடைகளை அனுமதிக்குமா உச்சநீதிமன்றம்?!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

நன்கொடை:

தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பணத்துக்கு மாற்றாக தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுநல வழக்கு:

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாரா அமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற மனுதாரர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்குகளை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது.

பட்டியலிடபடாத வழக்கு:

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஏப்ரல் 5-ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி என்.வி. ராமன் முன் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும், அவசர விசாரணை தேவை என்றும் கூறியிருந்தார்.

அப்போது அரசு சாரா அமைப்பின் மனுவை விசாரணைக்கு விரிவாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் இதுவரை பட்டியலிடப்படவில்லை.

                                   

                                                                                -நப்பசலையார்

இதையும் படிக்க:   ”ஹிஜாப் வேண்டும்...” நீதிபதி துலியா ஆதரிக்கும் காரணம் என்ன?!!...யார் இந்த நீதிபதி துலியா?!!