தேர்தலுக்கு பிந்தைய வன்முறை.. குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 50 ஆயிரம் சன்மானம் - சிபிஐ

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவாக உள்ள 7 குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. 

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை.. குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 50 ஆயிரம் சன்மானம் - சிபிஐ

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 

தேர்தலின்போது திரிணமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பிறகும் வன்முறை நீடித்ததில் பாஜக தொண்டர் அபிஜித் சர்க்கார் கொலை செய்யப்பட்டார். மேலும் பாஜக தொண்டர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளும் தீவைக்கப்பட்டு சூறையாடப்பட்டன.  

இதுகுறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள 7 முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.