கோவோவாக்ஸ், கார்பேவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி.!!

இந்தியாவில் கோவோவாக்ஸ், கார்பேவாக்ஸ் மற்றும் மோல்னுபிரவிர் ஆகிய தடுப்பு மருந்துகளை பயன்படுத்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால அனுமதி அளித்துள்ளதென சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

கோவோவாக்ஸ், கார்பேவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி.!!

நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனாக்கு இடையே, உருமாறிய ஒமிக்ரானும் பரவி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுதவிர பிற கொரோனா கட்டுப்பாடுகளையும் விதித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.  

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சொந்த நாட்டில் தயாரான கோவோவாக்ஸ், கார்பேவாக்ஸ் ஆகிய தடுப்பூசிகளை அவசர கால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம்  அனுமதி அளித்துள்ளது. 

இத்தகவலை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மோல்னுபிரவிர் என்ற மாத்திரைக்கும் அவசர கால அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.