ஒட்டு கேட்பு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் மீது அமலாக்கத் துறை எதிர்மனு..!!!

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் மீது அமலாக்கத் துறை எதிர்மனு..!!!

தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அல்லது கண்காணிப்பது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நேரத்தில் துணை நிர்வாக இயக்குநராக இருந்த ராமகிருஷ்ணாவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது அமலாக்கத் துறை.

ஜாமின் மனுவை எதிர்த்து வழக்கு:

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர்  சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது.  ஒட்டு கேட்பு விவகாரத்தில்மூளையாக செயல்பட்டவர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

சதி திட்டத்தில் மூளையாக செயல்பட்டவர்:

ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் துணை நிர்வாக இயக்குநராக இருந்த நேரத்தில் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கும் திட்டம் அனுப்பப்பட்டதாகவும் உரையாடல்களைக் கேட்பதற்காக தொலைபேசி எண்கள் ராமகிருஷ்ணா வழியாகவே வழங்கப்பட்டது எனவும் அமலாக்கத் துறை நீதிபதி ஜஸ்மீத் சிங்கிடம் கூறியுள்ளது.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குடியரசு தலைவரின் இந்திய பயணங்கள்..!!!