இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல எட்டிஹாட் ஏர்வேஸ் தடை.!!

எட்டிஹாட் ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல எட்டிஹாட் ஏர்வேஸ் தடை.!!

எட்டிஹாட் ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளதான் காரணமாக விமான சேவையை எட்டிஹாட் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக எட்டிஹாட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல எட்டிஹாட் விமான சேவைக்கு அனுமதி இல்லை என்றும் இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடிமகன்கள், தூதர்கள் , அரசு அலுவலக பிரதிநிதிகள் மற்றும் துபாயில் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.