"தூய்மை இயக்கத்தில் அனைவரும் இணையவேண்டும்" பிரதமா் மோடி அழைப்பு!!

தூய்மையான எதிா்காலத்தை உருவாக்க இன்று நடைபெறும் மாபெரும் தூய்மை இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என பிரதமா் மோடி அழைப்பு  விடுத்துள்ளாா்.

நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு காந்தியடிகளுக்கு தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இன்று தூய்மை பணிகள் மேற்கொள்ளும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தூய்மை இயக்கம் தொடர்பாக கேபினட் செயலாளர், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதன்படி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது.

மேலும் பூங்காக்கள், நதிகள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை இயக்கம் நடத்தப்படவுள்ளது. மேலும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே இந்த மாபெரும் தூய்மை இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என பிரதமா் மோடி அழைப்பு  விடுத்துள்ளாா். இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தூய்மையான இந்தியா நாம் அனைவரது பொறுப்பு என குறிப்பிட்டுள்ளாா். மேலும் தூய்மையான எதிா்காலத்தை உருவாக்க நடைபெறவுள்ள மாபெரும் தூய்மை இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என தொிவித்துள்ளாா்.