நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்...!!!

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்...!!!

வாக்காளா்கள் தங்கள் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க காலஅவகாசம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  அதன்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது. 

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிக்க:   விரைவில் சந்திராயன் 3....!!!