கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து அதிகரிப்பால்...கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து அதிகரிப்பால்...கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரியில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, கே.ஆர்.பி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 476 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.