மோர்பி தொங்கும் பாலத்தில் உயிரிழந்த பாஜக எம்.பி குடும்பம்..!! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!!

மோர்பி தொங்கும் பாலத்தில் உயிரிழந்த பாஜக எம்.பி குடும்பம்..!! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!!

குஜராத் மோர்பி பால விபத்தில் எனது சகோதரி குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர் என பாஜக எம்பி தெரிவித்துள்ளார். 

மோர்பி தொங்கும் பாலம் விபத்து:

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கும் பாலம் விபத்தில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் தெரிந்துகொள்க:  குஜராத் தொங்கு பாலம் விழுந்தது எப்படி? 

இறந்தவர்களில் குஜராத்தின் ராஜ்கோட் தொகுதியின் பாஜக எம்பி மோகன் பாய் குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன்.  இந்த விபத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

பாஜக எம்பி மோகன் பாய் குந்தாரியா:

”விபத்தில் எனது சகோதரி குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  எனது சகோதரியின் மைத்துனரின் நான்கு மகள்கள், மூன்று மருமகன்கள் மற்றும் ஐந்து குழந்தைகளை இழந்துவிட்டோம். இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இந்த விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ” என பாஜக எம்பி மோகன் பாய் குந்தாரியா தெரிவித்துள்ளார்.

மேலும், ”விபத்துக்குப் பிறகு நான் இங்கேயே தான் இருக்கிறேன்.  எனக்கு முன்னால் 100க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணி நடந்து வருகிறது.  விபத்துக்குப் பிறகு மோச்சி ஆற்றில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என குந்தாரியா கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கணவரின் ஆசையை நிறைவேற்ற ராணுவ அதிகாரியான பெண்..!!