குடும்ப அரசியலை எதிர்க்கும் கட்சியில் குடும்ப அரசியலா...!!!!

குடும்ப அரசியலை எதிர்க்கும் கட்சியில் குடும்ப அரசியலா...!!!!

பாஜகவின் தேசிய செயலாளர் பங்கஜா முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை அவரை சிக்கலில் தள்ளியுள்ளது. அவரது அறிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மீது பங்கஜா முண்டே கோபமாக உள்ளாரா என்ற விவாதம் வலுத்துள்ளது. 

பங்கஜாவின் இந்த அறிக்கையில் இருந்து பாஜக தலைவர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர். இதைப் பற்றி யாரும் எதுவும் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பங்கஜா முண்டே மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார். 

பாஜக இளைஞரணித் தலைவர் பங்கஜா மும்பையில் அம்பாஜோகையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “நான் மக்கள் மனதில் நிலைத்திருந்தால், எனது அரசியல் வாழ்க்கையை மோடியால் கூட நிறுத்த முடியாது. காங்கிரஸ் கட்சியில் பரம்பரை அரசியல் நடக்கிறது. மோடி இந்த அரசியலுக்கு முடிவு கட்ட விரும்புகிறார். நானும் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான், ஆனால் நான் உங்கள் இதயத்திலும் மனதிலும் நிலைத்திருந்தால் என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன நோக்கத்துடன் இது செயல்படுகிறது? தெரிந்துகொள்வோம்....!!!