டிராக்டர் பேரணியை திடீர் ரத்து செய்த விவசாயிகள்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது நடத்த திட்டமிட்டிருந்த டிராக்டர் பேரணியை விவசாயிகள் திடீரென ரத்து செய்துள்ளனர்.

டிராக்டர் பேரணியை திடீர் ரத்து செய்த விவசாயிகள்...

 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால், அதனை ரத்து செய்யவுள் ளதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. மேலும்   குளிர்கால கூட்டத்தொடரின் போது தினந்தோறும் 500 விவசாயிகள்  நாடாளுமன்ற வளாகத்தில் டிராக்டர் பேரணி நடத்துவர் எனவும் அறிவித்தது.

இந்தநிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளதால், டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாகவும், டிசம்பர் 4-ம் தேதிக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.