தலைமை செயலகத்தின் வாயிலில் அமர்ந்து விவசாயிகள் இரவு பகலாக போராட்டம்…  

ஹரியானாவின் கர்னாலில் அமைந்துள்ள துணை தலைமை செயலகத்தின் வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை செயலகத்தின் வாயிலில் அமர்ந்து விவசாயிகள் இரவு பகலாக போராட்டம்…   

ஹரியானாவின் கர்னாலில் அமைந்துள்ள துணை தலைமை செயலகத்தின் வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பா.ஜ.க.அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து அம்மாநிலத்தின் கர்னால் பகுதியில் நேற்று பிரம்மாண்ட போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட பெருந்திரளாக திரண்ட விவசாயிகளுடன் ஹரியானா அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில்,சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கர்னாலில் அமைந்துள்ள துணை தலைமை செயலகத்தின் வாயிலில் அமர்ந்து இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கர்னால் மற்றும் அதனை சுற்றுயுள்ள மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.