இந்தியா
மழை வெள்ளத்தால் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்... பிரதமர் மோடி உத்தரவு...
மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி பலியோனோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் மழை வெள்ளத்ததால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயுிரமும் பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் மோடி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
.png)
