காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் ஆடுகளை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்புத்துறையினர்...

ஆந்திர மாநிலத்தில் கடும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் ஆடுகளை, தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மீட்டனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் ஆடுகளை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்புத்துறையினர்...

கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மத்திகட்லா பகுதியில், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி யில், மேய்ச்சலுக்காக சென்ற ஆயிரக்கணக்கான ஆடுகள் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன், பொது மக்களும் இணைந்து, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஆற்றில் இருந்து மூன்றாயிரம் ஆடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன.