நாடு முழுவதும் சரவெடி பட்டாசு வெடிக்க தடை...

நாடு முழுவதும் சரவெடி பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் சரவெடி பட்டாசு வெடிக்க தடை...

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த கால நேரத்தை, காலை 4 மணி நேரமாகவும், மாலை 4 மணி நேரமாகவும் அதிகரித்து உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும், விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டுமென இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

அதன்படி தடை செய்யப்பட்ட வேதி பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் காவல் துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பு.தடை செய்யப்பட்ட பட்டாசை வெடிக்கக்கூடாது என அரசு விளம்பரப்படுத்த வேண்டும். சரவெடியை உற்பத்தி செய்யவோ, வாங்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. போலி பசுமை பட்டாசுகளை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.