டெல்லியில் I.N.D.I.A. ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!!

டெல்லியில் I.N.D.I.A. ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!!
Published on
Updated on
1 min read

எதிா்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

ஆளுங்கட்சியான பாஜகவை, வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து  I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கினா். அதைத் தொடர்ந்து, கூட்டணியின் பொதுக்கூட்டம் பாட்னாவிலும், 2வது கூட்டம் பெங்களூரிலும் மற்றும் 3-வது கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. 

இதில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் வரும் புதன்கிழமை டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com