கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது, இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...

தென் மேற்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் மழை உடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு மற்றும் காலை நேரங்களிலும் அதே போல் இன்று அதிகாலையும் பரவலாக மழை பெய்தது. மேலும் தற்போது கடல் சற்று சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கொலம்பியாவில் தொடரும் நிலச்சரிவு மரணங்கள்...காரணம் என்ன?!!

இதனை அடுத்து, புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களான காலாபட்டு, குருசுகுப்பம், வம்பாகிரப்பாளையம், பன்னித்திட்டு, வீராம்பட்டினம் உள்ளிட்ட 18 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை அந்தந்த மீனவ கிராங்களிலும், விசைப்படகுகள் மற்றும் பைஃபர் படகுகளை பாதுகாப்பாக தேங்காய்திட்டு மீன் பிடித்துறைமுகத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதே போல் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர். மேலும் சிறிய படகு வைத்துள்ள மீனவர்கள் சிலர் கரை ஒரம் மீன் பிடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அச்சுறுத்தல் காரணமா...? பாம்பன் ரயில் பாலத்தில் குவிந்த போலீசார்...!