அதானி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள்...சமாதானம் செய்த முதலமைச்சர்!!!

அதானி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள்...சமாதானம் செய்த முதலமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

மறுவாழ்வு மற்றும் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு கோரி கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.

விழிஞ்ஞம் போராட்டம்:

கேரளாவில் விழிஞ்சத்தில் அதானி துறைமுக திட்டத்தில் அறிவியல்பூர்வமற்ற முறையில் கற்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இதனால் வரும் காலங்களில் மீனவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  கட்டுமானப் பணியின் போது கரையோர நிலங்கள் சேதம் அடைந்ததாகக் குற்றம் சாட்டிய அவர்கள், கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.  இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தியும் வந்துள்ளனர்.

முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை:

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே கடல் அரிப்பால் வீடுகளை இழப்பவர்களுக்கு ரூ.5,500 வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.  மேலும் படகுகளுக்கான எரிபொருளுக்கான மானியம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் மறுவாழ்வு அடுக்குமாடி குடியிருப்புகளை ஓராண்டில் முடித்துக் கொடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

முடிவுக்கு வந்த போராட்டம்:

இதனால் அதானி துறைமுக திட்டத்துக்கு எதிராக கேரளாவின் விழிஞ்சத்தில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நடத்திய இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com