இந்தியக் கொடி குறித்த சட்டத்திருத்தத்தை வரவேற்கிறது ஃபிளாக் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா!

மூன்று நாட்களுக்கு திரங்காவை பறக்க விடலாம் எனக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தை வரவேற்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியக் கொடி குறித்த சட்டத்திருத்தத்தை வரவேற்கிறது ஃபிளாக் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா!

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், சாமானியக் குடிமகனும் தேசியக் கொடியை, தங்களது வீட்டு மாடிகளில் மூன்று நாட்களுக்கு பறக்க விடலாம் என்றும், இரவு பகல் என 24 மணி நேரத்திற்கு பறக்க விடலாம் என்றும், 2002ம் ஆண்டின் இந்திய தேசியக்கொடிக் குறித்த சட்டம் திருத்தப்பட்டது. இதனை, இந்தியக் கொடி அறக்கட்டளையான, ஃபிளாக் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் நவீன் ஜிண்டால் வரவேற்றார்.

இதனை முற்போக்கான முடிவு என அவர் கூறினார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியக் கொடிக் குறியீட்டின் இந்தத் திருத்தம், வருடத்தின் எல்லா நாட்களிலும் திரங்காவை கண்ணியத்துடனும் பெருமையுடனும் காட்சிப்படுத்த மேலும் மேலும் மக்களை ஊக்குவிக்கும், மேலும் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்கும் ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டிருந்தார்.

Leadership

2009ம் ஆண்டு, ஜிண்டால் வழங்கிய பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து, ‘சரியான வெளிச்சம் மற்றும் சக்தி காப்புப் பிரதியுடன் கூடிய ராட்சத கொடிக்கம்பங்களில்’ மூவர்ணக் கொடியை இரவும் பகலும் பறக்க விடலாம் என்று அரசாங்கம் அனுமதித்ததுக் குறிப்பிடத்தக்கது.மேலும், 2004ம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களைத் தவிர சாதாரண குடிமக்கள் தேசியக் கொடியைப் பறக்க விட அனுமதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தேசியக்கொடி இனி இரவிலும் பறக்கலாம்....மத்திய அரசு அறிவித்தது சாத்தியமாகுமா...?

பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, சாமனிய மக்களுக்கும், தங்களது தேசிய கொடியை கன்ண்டியமாகவும் பெருமையுடனும் வெளிப்படுத்த ஜிண்டால் நடத்திய போராட்டம், வெற்றி அடைந்ததாக, அறிக்கைக் கூறியது.

மேலும் படிக்க: மூவர்ண கொடி - மூன்று நாள் கொண்டாட்டம்!!!

ஜனவரி 23, 2004 அன்று, உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் 22 செப்டம்பர் 1995 தேதியிட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவுக்கு எதிராக இந்திய யூனியன் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீட்டை நிராகரித்தது. மேலும் தேசியக் கொடியை பறக்கவிடுவது உரிமையின் வெளிப்பாட்டின் சின்னம் என்று கூறியது. இது அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் கருத்து சுதந்திரத்திற்குக் கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.