திருப்பதியில் பறக்கும் சாலை; இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

திருப்பதியில் 650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பறக்கும் சாலை திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.   

திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பறக்கும் சாலை அமைக்க முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி காரப்பரேஷன்,  நெடுஞ்சாலை துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் ஆகியோரது கூட்டு திட்டத்தின் மூலம் திருச்சானூரிலிருந்து அரிபிரி வரை இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கருடா வாராவதி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை தற்போதைய ஆந்திர முதலமைச்சர்  ஜெகன் மேகன் ஸ்ரீநிவாச கேது என மாற்றியமைத்தார். 

650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பறக்கும் சாலையை இன்று முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்கவுள்ளார். இந்த பாலம் நாளை முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் செயல்பாட்டிற்கு வருவதின் வழியாக நெடுங்காலமாக திருப்பதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா