ஆபாச படத்தை பார்ப்பதை தவிர ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவுமில்லை... முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்....

பாஜக மாநில தலைவரின் பேச்சுக்கு  பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் குமாரசாமி.

ஆபாச படத்தை பார்ப்பதை தவிர ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவுமில்லை... முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்....

ஆபாச படங்களை பார்ப்பதை தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள வருமாறு முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பியதுடன், சட்டமன்றத்தில் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை எனவும் சாடினார்.