முன்னாள் முதல்வர் என்.டி ராமராவின் மகள் தூக்கு போட்டு தற்கொலை!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி ராமராவின் மகள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் என்.டி ராமராவின் மகள் தூக்கு போட்டு தற்கொலை!!

ஆந்திர மாநில முன்னாள் முதவல்ர் என்டி ராமராவின் மகள் உமா மகேஸ்வரி. இவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில இன்று  அவர் வீட்டிலிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது  குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.