
ஊழலுக்கு எதிராக போராட முந்தைய காங்கிரஸ் அரசுக்கு திராணி இல்லை என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, தேசத்தை ஏமாற்றி மக்களை கொள்ளையடிப்பவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது துளியும் கருணை காட்டப்படாது என கூறினார். முந்தைய காங்கிரஸ் அரசுக்கு ஊழலுக்கு எதிராக போராடு மனதைரியம் இல்லை என சாடிய அவர், காங்கிரசார்களுக்கு அரசியல் மட்டுமின்றி நிர்வாக திறமையும் இல்லை எனவும் கூறினார். மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை இடைத்தரர்கள் இன்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மட்டுமின்றி கடந்த 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போதைய பாஜக அரசோ நாட்டின் வளர்ச்சிக்கு எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை எனவும் கூறினார்.