உங்களது உரிமைகளை யாரும் பறிக்காத வகையில் வாக்களியுங்கள் - ராகுல் காந்தி டுவிட்

உங்களது உரிமைகளை யாரும் பறிக்காத வகையில் வாக்களியுங்கள் - ராகுல் காந்தி டுவிட்

உங்களது உரிமைகளை யாரும் பறிக்காத வகையில் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கருத்து, அமைதியான போராட்டம், சமூக சமத்துவம் மற்றும் உங்கள் வாக்கு இவையெல்லாம் சேர்ந்ததே ஜனநாயகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரிமைகளை யாரும் பறிக்காத வகையில் உங்களுடைய வாக்குகளை செலுத்துங்கள் எனவும் கூறியுள்ளார். அடுத்த மாதம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.