காங்கிரஸிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங்

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

காங்கிரஸிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங்

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர்  ஈடுபட்டு வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பலர் கட்சி தாவி வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ரதன்ஜித் பிரதாப் நாராயின் சிங், காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.

இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள ஆர்பிஎன் சிங், காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியிடம் அளித்த ராஜினாமா கடிதத்தையும் பதிவேற்றியுள்ளார். இதனிடையே ஆர்பிஎன் சிங், பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.