உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மருத்துவமனையில் அனுமதி

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் நேற்று மாலை லக்னோவின் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க நெப்ராலஜி, இருதயவியல், நரம்பியல், உட்சுரப்பியல் மற்றும் நரம்பியல் ஓட்டாலஜி துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2 வாரங்களாக லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.