
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பேராயர் பிரான்கோ முலக்கல் நிரபராதி என கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தர் கிறிஸ்தவ மிஷனரியில் பேராயராக இருந்தவர் பிரான்கோ முலக்கல். இவர் மீது, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அதே மிஷனரியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை, கோட்டயத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பேராயர் பிரான்கோ முலக்கல் நிரபதாரி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் கன்னியாஸ்திரி கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.