இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள்...

இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள்...
இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கை ஒன்றை, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வெளியிட்டார். 
 
அந்த அறிக்கையில், கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் டி.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளதாகவும், இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயாலஜிக்கல் இ-நிறுவனத்தின் தடுப்பூசியும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அடினோ இன்ட்ராசல் தடுப்பூசியும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது என்றும், ஜெனோவோ பயோபார்மசியூடிகல்ஸ் நிறுவனத்தின் எம். ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
குர்கானைச் சேர்ந்த ஜெனிக் லைப் சயின்சஸ் நிறுவனம் உருவாக்கி வருகிற தடுப்பூசி, பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது என்பதையும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.