ராகுல் கேட்ட நான்கு கேள்விகள்!!!பதிலளிப்பாரா பிரதமர்....!

ராகுல் கேட்ட நான்கு கேள்விகள்!!!பதிலளிப்பாரா பிரதமர்....!
Published on
Updated on
1 min read

குஜராத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார் ராகுல் காந்தி.  இன்னும் எத்தனை காலத்திற்கு அமைதியாக இருப்பீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

சமீபத்தில் மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குஜராத்தில் ரூ. 1026 கோடி மதிப்பிலான போதைப்பொருளினைக் கைப்பற்றியது.  இதனை குறித்து ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.  குஜராத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்வது சுலபமானதா எனக் கேட்டு மேலும் நான்கு கேள்விகளை மோடியிடம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்.  கேள்விக்கான பதிலையும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ராகுல்.

1.  ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் குஜராத்தை அடைகின்றன.  காந்தி-படேலின் புண்ணிய பூமியில் இந்த விஷத்தைப் பரப்புவது யார்?

2. பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

3. என்சிபி மற்றும் பிற அரசு நிறுவனங்களால் இதுவரை குஜராத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் 'நார்கோஸ்'களை ஏன் பிடிக்க முடியவில்லை?

4. மாஃபியா 'நண்பர்களுக்கு' பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய, குஜராத் அரசில் அமர்ந்திருப்பவர்கள் யார்?

பிரதமரே, இன்னும் எவ்வளவு காலம் மௌனம் காக்கப் போகிறீர்கள். கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் ராகுல்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com