கொரோனா எதிரொலி...பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக அரசு! 

கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா சற்று அதிகமாகி உள்ளதால் இன்று இரவு  8 மணி முதல்  பெங்களூருவில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்  அசுர வேகம் எடுத்துள்ள நிலையில், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு,வார இறுதி ஊரடங்கு ஆகிய விதிகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றனர்.

தற்போது இரவு ஊரடங்கு குறித்து செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சலூன்,அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது.

 திருமண நிகழ்ச்சியில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். நகரப் பேருந்து ,ஆட்டோ வாடகைக் கார் சேவைகள் ரத்து. மெட்ரோ ரயில் சேவை தேவைகளின் அடிப்படையில் இயக்ங்க உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான காய்கறி, பழம் ,பால் ,மருந்தகம் மருத்துவமனை மற்றும் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.