உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக மானியம் அறிவிப்பு!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக மானியம் அறிவிப்பு!

பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மானியம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குபவருக்கு ஏற்கனவே மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இத்திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : இலங்கைக்கு முட்டை ஏற்றுமதி; கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி!

கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 200 குறையும் என்பதால் இத்திட்ட பயனாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்ஷ பந்தனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு மோடியின் பரிசு தான், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் என்று மத்திய அமைச்சர் அனிராக் தாக்கூர் கூறியுள்ளார்.