எதிர்க்கட்சி தலைவர்களின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதா...?காரணம் என்ன?!!

எதிர்க்கட்சி தலைவர்களின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதா...?காரணம் என்ன?!!

Published on

பாதுகாப்பை இழந்தவர்களில் பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர்.  அதே நேரத்தில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திரும்ப பெறப்பட்ட பாதுகாப்பு:

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான மஹா விகாஸ் அகாடி ஆட்சியில் இருந்து வெளியேறியவுடன் ஷிண்டே அரசாங்கம் அவர்களது பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணியின் 25 தலைவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

உத்தவ் தாக்கரேவிற்கு பாதுகாப்பு:

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், இந்த தலைவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு வெளியே நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாது எனவும் அவர்களின் பாதுகாப்பு குறித்து புதிய மதிப்பீடு செய்யப்பட்டு, அதை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அதிகாரி கூறியுள்ளார்.  

என்சிபி தலைவர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் பாராமதி மக்களவை எம்பியுமான சுப்ரியா சூலே உட்பட அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

பாதுகாப்பை இழந்தவர்கள்:

பாதுகாப்பை இழந்தவர்களில் பலர் அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்கள் ஆவர்.  ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட அனில் தேஷ்முக் உள்ளிட்ட சில என்சிபி தலைவர்களின் பாதுகாப்பை அரசு திரும்பப் பெறப்பட்டுள்ளது.  இவர்களில் பாட்டீல், புஜ்பால், தேஷ்முக் ஆகியோர் கடந்த காலங்களில் உள்துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

செயலாளருக்கு பாதுகாப்பு?:

இதில் சுவாரஸ்யமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும் நம்பகமான உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு 'ஒய்-பிளஸ்-எஸ்கார்ட்' அட்டை வழங்கப்பட்டுள்ளது அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் மற்றும் முந்தைய எம்விஏ அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த என்சிபி தலைவர் திலீப் வால்ஸ்-பாட்டீல் ஆகியோருக்கும் 'ஒய்-பிளஸ்-எஸ்கார்ட்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரான பிருத்விராஜ் சவானுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com