பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றினாரா போக்குவரத்து துறை அமைச்சர்?!! எப்படி?!!

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றினாரா போக்குவரத்து துறை அமைச்சர்?!! எப்படி?!!

வடகிழக்கு மாநிலங்களுக்கான சாலை மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வடகிழக்கு மாநிலங்களுக்கான சாலை மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  இத்திட்டங்களுக்காக ரூ.1.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் கட்காரி.  

கவுகாத்தியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஆய்வு செய்த நிதின் கட்காரி இந்தத் திட்டங்களில் சாலைகள், ரோப்வேகள், ஆர்ஓபிகள், பிரம்மபுத்திரா நதியின் மீது பெரிய பாலங்கள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவித்தார்.  

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், வடகிழக்கு இந்தியாவில் இணைப்பு இடைவெளியைக் குறைக்கவும், இப்பகுதிகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார் கட்காரி. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார்...காரணம் என்ன?!!