அசாமில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை.. வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர்!!

அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு குடியிருப்பு வாசி ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அசாமில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை.. வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர்!!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா மற்றும் உப நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று மழை சற்று குறைந்ததை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் வடியத் துவங்கி உள்ளது. மாநிலத்தின் 30 மாவட்டங்களில், 45 லட்சத்திற்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். கச்சார் மாவட்டத்தின் சில்சார் நகரம் ஒரு வாரமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ளோரை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

விமான படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போடப்படுகின்றன. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும், அவர் மகன் ஆனந்த் அம்பானியும் அசாம் முதலமைச்சர் நிவாரண நிதியத்திற்கு, 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அசாமில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

தற்போது அசாமில் மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. இந்நிலையில் அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு குடியிருப்பு வாசி ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சில்ச்சாரில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் ரப்பர் படகில் முதலமைச்சர் சென்று வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டார்.