மும்முனை போட்டிக்கு இடையில்...மந்தமாக நடைபெறும் வாக்குப்பதிவு...ஆட்சிக் கட்டிலை பிடிக்கப்போவது யார்?

மும்முனை போட்டிக்கு இடையில்...மந்தமாக நடைபெறும் வாக்குப்பதிவு...ஆட்சிக் கட்டிலை பிடிக்கப்போவது யார்?

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தல்:

இமாச்சல பிரதேசத்துக்கு கடந்த 2017ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை சேர்ந்த ஜெய்ராம் தாகூர் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், தற்போது, இமாச்சல பிரதேச சட்டசபையின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வர உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. 

இதையும் படிக்க: 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு எடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தேர்தல் தொடங்கியது:

அதன்படி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.   காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை ஐந்தரை மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதிலும் 7 ஆயிரத்து 881 வக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 68 தொகுதிகளிலும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆயுதப் படையினர், மாநில போலீசார் என 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

மந்தமாக நடைபெறும் வாக்குப்பதிவு:

இந்நிலையில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாகவும், முதல் ஒரு மணி நேரத்தில் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக, இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருவதால், யார் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் நிலவி வருகிறது.