வீடில்லா ராகுல்காந்தி... ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு வழங்க கோரிக்கை!!!

வீடில்லா ராகுல்காந்தி... ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு வழங்க கோரிக்கை!!!

கல்பெட்டாவில் காங்கிரஸ் தலைவருக்கு வீடு மற்றும் நிலம் வழங்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக வயநாடு பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.மது விமர்சனம் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 52 ஆண்டுகளாக எனக்கு வீடு இல்லை எனக் கூறிய விவகாரத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.  வயநாடு எம்பி ராகுல் காந்தியை பாஜக இப்போது கேலி செய்து வருகிறது.  

ராகுலுக்கு வீடு கேட்டு கல்பெட்டா பேரூராட்சி செயலாளருக்கு வயநாடு பாஜக சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விண்ணப்பத்தில் காங்கிரஸ் எம்.பி. யின் பெயரை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்த்து அவருக்கு வீடு, நிலம் வழங்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கல்பெட்டாவில் காங்கிரஸ் தலைவருக்கு வீடு, நிலம் வழங்க முயற்சிப்பதாக வயநாடு பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.மது கூறியுள்ளார்.  இந்த வீடு மாவட்டத்தின் மையப் பகுதியில் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.  வயநாட்டில் ஒரு வீடு இருப்பது ராகுல் காந்திக்கு உகந்த சூழ்நிலையாக இருக்கும் என்று கூறி, அவர் விடுமுறையைக் கழிக்க தானே இங்கு வருகிறார் என கிண்டலடித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   27 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை தழுவிய பாஜக!!!