கலெக்டர் ஆனா தான் அது நடக்கும்... சூர்யவம்சம் ஸ்டைலில் கன்டிஷன் போட்ட கணவன்...

கலெக்டர் ஆனாதான் நமக்குள் முதலிரவு நடக்கும் என்று கணவன், மனைவியிடம் நிபந்தனை விதித்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கலெக்டர் ஆனா தான் அது நடக்கும்... சூர்யவம்சம் ஸ்டைலில் கன்டிஷன் போட்ட கணவன்...
Published on
Updated on
1 min read

ஜாம்ஷெட்பூர் நகரில் கணவர் ஒருவர் தனது மனைவியிடம் முதலிரவில் தனக்குள் ஒரு நீண்டகால ஆசை இருந்ததாக தெரிவித்த சம்பவம் சூர்யவம்சம் திரைப்பட பாணியில் அரங்கேறியுள்ளது.

பொட்கா கிராமத்தில் வசிக்கும் பல்லவி என்பவர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஜெய்மால் மண்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எம்பிஏ பட்டம் பெற்ற ஜெய்மால் மண்டல் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவியாக இருக்க ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் எனவும், 2 ஆண்டுகளுக்குள் ஐஏஎஸ் அதிகாரியானால்தான் நமக்குள் முதலிரவு நடக்கும் என்ற வினோதமான நிபந்தனையை தனது மனைவியிடம் முன்வைத்தார். 

மறுநாள் காலையில் தனக்கு நேர்காணல் இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்ற ஜெயமால் திரும்பி தன்னிடம் நெருங்கவில்லை. ஒருமுறை கூட கணவர் தன்னை பெயர் சொல்லிக்கூட அழைக்கவில்லை என்றும், தான் பேச முயன்ற போதெல்லாம் மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எங்கே இதை வெளியே சொன்னால் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுமோ என்று எண்ணி எல்லோரிடமிருந்தும் பிரச்சனையை மறைத்துள்ளார். 

தொடர்ந்து, இதுபோலவே நாட்கள் நகர பொறுமையிழந்த அந்த பெண் தனது மாமியாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு நாளுக்கு நாள் மாமியார் கொடுமை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனது வீட்டிற்கு சென்ற பல்லவி தனது தந்தையிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கிழக்கு சிங்பூமில் உள்ள பொட்கா காவல் நிலையத்தில் கணவர் மேல் புகார் அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com