நீங்க நடையா நடங்க! நாங்க பைக்-ல சுத்தறோம்!!!- காங்கிரசுக்கு போட்டியாக பாஜக!!!

காங்கிரஸ் ஒரு பக்கம் இந்தியாவை சேர்க்கும் விதமாக நடை பயணம் மேற்கொண்டு வர, சுதந்திரம் வேண்டி பாஜக பைக்கில் வலம் வருகின்றனர்.

நீங்க நடையா நடங்க! நாங்க பைக்-ல சுத்தறோம்!!!- காங்கிரசுக்கு போட்டியாக பாஜக!!!

ஹைதராபாத்: பாஜக - வின் பெண் உருப்பினர்கள் மற்றும் தலைவர்கள் இணைந்து, ஹைதராபாதின் முக்கிய பகுதிகளில் தங்களது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து, ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கைகளில், தேசிய கொடியும், பதாகைகளையும் ஏந்திய வண்ணம் ஹைதராபாதின் நினைவு சின்னமான ‘சார்மினார்’ அருகில் உள்ள பாக்கியலட்சுமி அம்மன் கோவில் முன் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | முன்னோக்கி நடக்கும் ராகுல்… பின்னோக்கி போகும் காங்கிரஸ்…

அஞ்சலியில் தொடங்கிய பேரணி:

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தி, பின் அங்கிருந்து சட்டமன்றத்திற்கு இரு சக்கர வாகனக்களில் பயணித்துள்ளனர். பாஜக-வின் மகிலா மோர்ச்சா நடத்திய இந்த பேரணியை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார்.

இந்த பாதையில்:

இந்த பேரணி பரபரப்பான குல்சார் ஹவுஸ், பத்தேர்கட்டி, மதீனா சர்க்கிள், நயாபுல், அப்சல்கஞ்ச், சித்தி அம்பர் பஜார், மோஸ்ஸாம் ஜாஹி மார்க்கெட் மற்றும் நாம்பள்ளி வழியாக சட்டசபை கட்டிடம் முன்பு உள்ள சர்தார் படேல் சிலையை அடைந்தது.

மேலும் படிக்க | ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய பாஜக..! ஆம் ஆத்மி செய்தது இது தான்..!

ஆண்டுதோறும் கொண்டாட்டம்!!!

ஹைதராபாத் இந்தியாவுடன் செப்டம்பர் 17ம் தேதி 1948ம் ஆண்டு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஹைதராபாத் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இதற்காக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), விரைவு அதிரடி படை (RAF) மற்றும் பிற மத்திய ஆயுதம் தாங்கிய போலீஸ் படை வீரர்கள் அணிவகுப்பும் நடத்துவர்.

இந்நிலையில், பாஜக நடத்திய இந்த பேரணியில், காவி நிற உடை அணிந்து, ஹைதராபாதை உருவாக்கியவராக போற்றப்படும் முகமது குலி குதுப் ஷா கட்டிய 431 ஆண்டு பழமையான சின்னமான சார்மினாரில் துவங்கியிருக்கின்றனர் பாஜக.

மேலும் படிக்க | இன்னும் 145 நாட்களே உள்ளன!!!பாஜகவுக்கு காலக்கெடு வைத்த ராகுல்!!!

‘நீங்கள் நடந்தால் நாங்கள் பைக்கில் வருவோம்!!!’

கடந்த செப்டம்பர் 7ம் தேதி, இந்தியாவின் அனைத்து மதம், இனம், மொழி பேதங்கள் மறந்து இந்தியர்களாக இணைக்கும் முயற்சியில், எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி தொடங்கி ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசம் வரை நடை பயணமாக வலம் வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாஜகவினர், தங்கள் பக்கமும் இப்படி ஒரு கவனத்தை ஈர்க்கும் வகையில் போட்டி போட்டு ஈடுபடுவது எந்த விதத்தில் அவர்களுக்கு தேர்தலுக்கு உதவும் என்பது கண்டிப்பாக தெரியவில்லை.

மேலும் படிக்க | பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் உத்திரபிரதேசம்!!!

இந்தியா முழுக்க இல்லை! மூன்று மாநிலங்கள் போதும்!!!

காங்கிரஸ் கட்சி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் 150 நாட்களுக்கு சுமார் 3500 கி.மீ தூரம் நடை பயணமாக செல்ல இருக்கும் நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு அந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில், வாக்குகளை சேகரிக்கும் வகையில் காங்கிரஸ்-இன் இந்த முயற்சியை முறியடிக்க, பாஜகவினர் எந்த வகையில் தங்களது ஈடுபாட்டைக் காட்டி வருகின்றனர் என்ற கேள்விகள் கிளம்பின. அதற்கு பதிலளிக்கும் வகையில், வரும் 17ம் தேதியன்று, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும் நிகழ்ச்சியாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

பாஜகவா? காங்கிரசா?

ஆனால், ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 17ம் தேதி, இந்திய பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள் என்பதும், அன்று, அவர் பல வகையான திட்டங்களை அறிவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் இவ்வளவு கஷ்டப்பட்டும் எந்த பிரயோசனமும் இல்லையோ என்ற கவலை அக்கட்சியினருக்கு உருவாகியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்