ஆக்சிஜனை வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்துள்ளதை ஏற்க முடியவில்லை,.பாஜக குற்றச்சாட்டு.! 

ஆக்சிஜனை வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்துள்ளதை ஏற்க முடியவில்லை,.பாஜக குற்றச்சாட்டு.! 

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஆக்சிஜனை வைத்து டெல்லி முதல்வர் அரசியல் செய்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பாஜக மூத்த தலைவர் சம்பிட் பத்ரா குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா 2 ஆம் அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்தனர். மத்திய அரசு தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதில்லை எனவும், அதனால் உயிர்பலிகளை தடுக்க முடியவில்லை எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக தாக்கியிருந்தார். 

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் தேவையை காட்டிலும்  4 மடங்கு  ஆக்சிஜனை டெல்லி அரசு மத்திய அரசிடம் கேட்டுபெற்றுள்ளது தற்போது தணிக்கை குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சம்பிட் பத்ரா, ஆக்சிஜன் பற்றாக்குறையை வைத்து  அரவிந்த கெஜ்ரிவால் அரசியல் செய்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் சாடியுள்ளார்.