"என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" -பிரதமர் மோடி!

"என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" -பிரதமர் மோடி!

Published on

சந்திரயான் மூன்று சாதனை மகிழ்ச்சியால் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

சந்திரயான் 3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி  இத்திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று பெங்களூரு வந்திருந்தார். பெங்களூருவில் உள்ள ஹெச் ஏ எல் விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்து பொது மக்களிடம் உரையாற்றும் போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன்" என்று முழக்கமிட்டார்.

தொடர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்தியா திரும்பியவுடன், முதலாவதாக நமது விஞ்ஞானிகளை சந்திக்க முடிவு செய்து பெங்களூருவுக்கு வந்துள்ளதாக கூறினார். பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். வாகனத்தில் நின்று கொண்டு வழிநெடுகிலும் இருந்த மக்களுக்கு கையசைத்துச் சென்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com