பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை,. ஆனால் வருத்தம் தெரிவிக்கிறேன்,! புதுவை பாஜக எம்.எல்.ஏ.!  

பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை,. ஆனால் வருத்தம் தெரிவிக்கிறேன்,! புதுவை பாஜக எம்.எல்.ஏ.!  

பாஜக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று புதுவை பாஜக எம்.எல்.ஏ ஜான் குமார் தெரிவித்துள்ளார். 

2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியிலிரு்து காங்கிரஸ் சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் குமார். பின் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு உபகாரமாக காமராஜர் நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் இவரை நிற்க வைத்து வெற்றிபெற வைத்தது. 

அதன்பின் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து நாராயணசாமி அரசை கவிழவைத்து பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த இவருக்கு அமைச்சர் பதவி தருவதாக பாஜக உறுதியளித்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர் பாஜக சார்பில் வெற்றிபெற்றும் அமைச்சர் பதவியை ஜான் குமாருக்கு கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இவர் இருந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஜான் குமாரின் ஆதரவாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் நுழைந்து அதை அடித்து நொறுக்கினார்கள்.   

இந்நிலையில் இன்று புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதை மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர், 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ ஜான் குமார் "அமைச்சர் பதவி கிடைக்காததால் மன இருக்கத்துடன் இருந்தேன், நடந்த சில சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.