
மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நீதியின் மூலப்பொருளாக நின்று காக்குமாறு மணிப்பூர் ஆளுநர் அனுசுயாவுடன் ’இந்தியா’ எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மணிப்பூரில் நிலவி வரும் சூழல் தொடர்பாக ஆராய காங்கிரசின் ஆதிர் ரஞ்சன், திமுகவின் கனிமொழி, விசிகவின் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 20 இந்தியா எதிர்கட்சி எம்.பிக்கள் நேரில் சென்றனர்.
இம்பால், சுராசத்பூர் உள்ளிட்ட பகுதிகளை இருகுழுக்களாக ஆய்வுசெய்தபின் அனைவரும் இன்று ஆளுநரை சந்தித்தனர்.
அப்போது முகாம்களில் உள்ள மக்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், மத்திய - மாநில அரசுகளின் தோல்வியையே இச்சூழல் காட்டுவதாகவும் கூறி அறிக்கை அளித்தனர்.
மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசிடம் கூடுதல் அழுத்தத்தை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிக்க | மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் உடன் கட்சி மேலிடம் ஆலோசனை!