கப்பல் படையில் இணையும் ஐ.என்.எஸ் வேலா..!

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்..!

கப்பல் படையில் இணையும் ஐ.என்.எஸ் வேலா..!

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். வேலா என்ற நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இதனை கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் இன்று மும்பையில் உள்ள நோவல் கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து இயக்குகிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாவல் குரூப் என்ற நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் உள்ள மசகான் சாக் என்னும் அரசு கப்பல் கட்டுமான நிறுவனம் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி 4-வது ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டே நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.