உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
Published on
Updated on
1 min read

இந்திய கடற்படைக்கு சொந்தமாக போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ரோந்து கப்பல்கள் என 130 கப்பல்கள் உள்ளன. வரும் 2027ம் ஆண்டிற்குள் கடற்படை தளவாடங்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் உள்ளூரிலேயே தயாரான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இன்று, கப்பற்படையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பையில் வைத்து பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார். 

சுமார் 7,400 டன் எடை கொண்ட இந்த கப்பல், மும்பை கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு, அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிர்பய், பிரம்மோஸ், பாரக் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள், அதிநவீன ரேடார்கள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.  2 ஹெலிகாப்டர்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வசதியும் இதில் உள்ளது.  இதை தொடர்ந்து வருகிற 28ம் தேதி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலும்  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com